நைஜீரியாவில் மோகுன்னே கிராமத்துக்குள் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து 40 விவசாயி்களை சுட்டுக் கொன்றது
6 months ago

நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள் இரவு ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து அங்குள்ள விவசாயி்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இச் சம்பவத்தில் 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
