
இலங்கையின் விமானப் படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள இஸ்ரேலின் போர் விமானம்.
இலங்கை விமானப்படை அடுத்த ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அதன் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட கிபீர் (Kfir) போர் விமானங்களில் ஒன்றை தமது படையில் சேர்த்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது, இலங்கையின் விமானப்படையை நவீனமயமாக்குவதற்காக, IAI என்ற இஸ்ரேலின் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் 2021இல் கையெழுத்திட்ட 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை விமானப்படையின், ஐந்து கிபீர் விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இதில் நவீன ரேடார், உணர்கருவிகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் புதிய தலை கவசங்களின் ஒருங்கிணைப்பு அடங்குகின்றன.
இந்த மேம்படுத்தல் முடிந்ததும் கிபீர் விமானங்கள் மேலும் 15 ஆண்டு உத்தரவாதத்தைப் பெறுகின்றன.
இராணுவ மற்றும் வணிக விமானங்களை மேம்படுத்துவதில் விரிவான அனுபவத்தைக் கொண்ட IAI நிறுவனம், இஸ்ரேல் விமானப்படை, அமெரிக்க விமானப்படை மற்றும் போயிங் போன்ற வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியுள்ளது.
முன்னதாக இலங்கை விமானப்படை அதன் பரந்த விரிவாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய Y12 விமானங்களையும் கொள்வனவு செய்துள்ளது
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
