இந்தியாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வருகின்றது. இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட் டங்களின் நிலை குறித்து கண்டறியவே இந்தக் குழு இங்கு வருகிறது. இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்தக் குழு வில் உள்ளனர்.
அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என் பதை மதிப்பாய்வு செய்யும் வகையிலும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தக் குழுவின் வருகை வாய்ப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரி விக்கப்பட்டது.
இந்திய குழுவினர் நாட்டின் முக்கி யஸ்தர்களுடன் பேச்சுகளையும் நடத்துவர் என்று தெரிய வருகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
