வீதி விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
குமாரபுரம், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி சிவானந்தன் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 9ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஊற்றம்பலப் பிள்ளையார் கோவிலடி யில் அவர்மீது மோட்டார் சைக்கிள் மோதி காலில் படுகாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் வீட்டுக்கு செல்ல முடியாத அவர் வீதி ஓரமாக படுத்திருந்தார்.
மறுநாள் காலை, அவ்வீதியால் வந்த ஒருவர் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்று வீட்டில் சேர்த்துள்ளார்.
அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
