இலங்கையில் குடியுரிமை பெறலாம் - வர்த்தகமானி வெளியீடு
இலங்கை குடியுரிமையை கைவிட்டு சென்றவர்கள், இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமையைக் கொண்டவர்களுக்கு இலங்கையில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர், அதே போல் ஒரு வெளிநாட்டு வாழ்க்கைத்துணைவர் திருமணமாகி 6 மாதங்களுக்குப்பிறகு புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதன்மை விண்ணப்பதாரருக்கு ஆயிரம் டொலர் கட்டணம் அறவிடப்படுவதுடன் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுக்கு 400 டொலர் கட்டணம் அறவிடப்படும்.
வர்த்தமானி அறிவித்தலின் படி, 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இரத்துச் செய்யப்பட்டால், நிரந்தர வதிவிட அந்தஸ்து தானாகவே இரத்துச்செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
