
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாண பயணத்தின் போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.
மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
