சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக் கொள்ளக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு

சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக் கொள்ளகூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பொக்ஸ் நியுஸ் பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதிக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் சமீபத்தில் சிறந்த நட்புறவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
கொவிட்டிற்கு முன்பாக தனக்கும் சீன ஜனாதிபதிக்கும் சிறந்த உறவுகள் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா ஒரு பேராவல் உள்ள நாடு சீன ஜனாதிபதியும் பேராவல் உள்ள நபர் என தெரிவித்துள்ள டிரம்ப் அவர் எனது நண்பர் போன்றவர் சிறந்த நட்புறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிக்கும் திட்டத்தை நியாயப்படுத்தியுள்ள டிரம்ப் சீனா அமெரிக்காவிடமிருந்து அதிகளவு பணத்தை பெறுகின்றது அந்த பணத்தை கொண்டு தன்னை அபிவிருத்தி செய்கின்றது என தெரிவித்துள்ளார்.
சீனா மீது எங்களிற்கு ஒரு பலம் தான் உள்ளது அது வரி என தெரிவித்துள்ள டிரம்ப் அவர்கள் அதனை விரும்பவில்லை,நான் சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கலாம்,என குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
