ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறை வடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறை வடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக நேற்று இடம்பெற்றது.
நேற்றைய தினம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள். விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
தபால் மூல வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட் டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
