வாழைச்சேனை காகித தொழிற் சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை காகித தொழிற் சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த இயந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின்னர் காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு, வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மூடுவதற்குப் பதிலாக, பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்வதற்காக வேலைகளை முன்னெடுக்கத் தீர்மானித்தது.
மேற்படி தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் என்பதால் பழுது பார்க்கும் வேலைத்திட்டத்திற்காக சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் இயந்திரங்களை புதுப்பித்தால், ஒரு நாளைக்கு 5 தொன் காகிதம் உற்பத்தி செய்வதன் மூலம் மாதத்திற்கு 22 மில்லியன் ரூபா இலாபம் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
