யாழ்.கீரிமலையிலிருந்து பருத்தித்துறை ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகிறது.
9 months ago

யாழ்.கீரிமலையிலிருந்து பருத்தித்துறை ஊடாக கொழும் புக்கான பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீள ஆரம்பமாகிறது.
தினமும் இரவு 7.15 மணிக்கு கீரிமலையில் இருந்து சேவையை தொடங்கும் பேருந்து காங்கேசன்துறை - மயிலிட்டி - தொண்டைமானாறு - வல்வெட் டித்துறை ஊடாக பருத்தித்துறையை அடைந்து இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மந்திகை - நெல்லியடி ஊடாக கொழும்புக்கு பயணமாகும்.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையால் நடத்தப்படும் இந்தப் பேருந்து சேவை 2020ஆம் ஆண்டு கொரோனா மற்றும் ஆளணிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
