பிரிவினைவாத போரை முறியடித்த இராணுவத்தினரை போர் குற்றம் இழைத்தனர் என்று குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராக போர்குற்ற சாட்சியங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் - ஜெனிவா நகரில் 46/1 பிரேரணைக்கு அமைய கடந்த இரண்டு வருடங்களாக இந்த அமைப்பு செயல்படுகிறது என்று சரத் வீரசேகர எம். பி. தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் இராணுவ தளபதிகளுக்கு எதிராக கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருக்கின்றன என்று குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் அவர் தலைமையில் கூடிய போதே இதனைத் தெரிவித்தார்.
போர் குற்றம் இழைத்தனர் என்று சாட்சிகள் கிடைத்த இராணுவ தளபதிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு ஏற்கனவே சில நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த வெளியகப் பொறிமுறை வெளிவிவகார அமைச்சால் நிராகரிக்கப்பட்ட போதும், இந்நாட்டு இராணுவ தளபதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதே இங்குள்ள ஆபத்தான நிலைமை.
இந்நாட்டில் இடம்பெற்ற போர் புலிகள் அமைப்புக்கு எதிரானதே அன்றி தமிழ் இனத்துக்கு எதிரானதாக அடை யாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த வெளியகப் பொறி முறைக்கு வாய்ப்புக் காணப்படுகிறது என்றும் இதன் போது சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
