வெளிநாட்டில் புகலிடக் கோரிக்கைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கடிதம் போன்று போலியான கடிதம் முல்லைத்தீவில் இருவர் கைது

வெளிநாட்டில் புகலிடக் கோரிக்கையைப் பெறுவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கடிதம் போன்று போலியான கடிதத்தைத் தயாரித்த முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் இருக்கும் நபர்களுக்காகவே அவர்கள் இந்தக் கடிதத்தைத் தயாரித்துள்ளனர் என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைக்கு அழைக்கப்படுவது போன்று இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 28 மற்றும் 33 வயதுடையவர்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுக்காக இதுபோன்று பாரதூரமான குற்றச்செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
