
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த சொகுசு வாகனம் புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் வைத்து இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த போது, பிரதான வீதிக்குள் திடீரென பிரவேசித்த மோட்டார் சைக்கிள் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த சொகுசு வாகனம் மீது மோதாமல் இருக்க சாரதி முயற்சித்ததில் குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த சொகுசு வாகனத்திற்கும், மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய அளவில் சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும் கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
