வேலை நிறுத்தம் இடம்பெறுமாயின் LCBO கடைகள் மூடப்படும்

1 year ago


கனடாவின் மதுபான விற்பனை நிலையமான LCBO (Liquor Control Board of Ontario) இன் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஆரம்பமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலை நிறுத்தம் இடம்பெறு மாயின் அடுத்த இரண்டு வாரங்க ளுக்கு அனைத்து LCBO கடைகளையும் மூடும் நிலையைத் தோற்றுவிக்கும். ஒன்ராரியோ பொதுச் சேவை ஊழியர் சங்கத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் சுமார் பத்தாயிரம் LCBO ஊழியர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் சட்டப்பூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்கள்.

ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால், அனைத்து LCBO விற்பனை நிலையங் கள் 14 நாள்களுக்கு மூடப்படும் என LCBO தெரிவித்துள்ளது.

ஓர் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், 30 LCBO கடைகள் மாகாணம் முழுவதும் ஜூலை 19ஆம் திகதி முதல் திறக்கப்படும் என LCBO குறிப் பிட்டுள்ளது.

ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் மட்டும் வரை யறுக்கப்பட்ட நேரங்களில் இந்த LCBO கடைகள் செயல்படும் என கூறப்ப டுகிறது.

அண்மைய பதிவுகள்