

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்படத் தயாரான விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (24) விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபவுன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள செய்திகள் தெரிவிக்கின்றன.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
