வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக குற்றச்சாட்டு

வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ் வீதி, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய காணிகளில் மண் போட்டு அவற்றை நிரவி புதிதாக வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் என்பவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களில் பல தடவை வெளிவந்துள்ளதுடன், விவசாயிகளும் கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் அவர்களிடம் கேட்ட போது, எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ் வீதியில் விவசாய காணியில் கிரவல் போட்டு நிரப்பும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதனை நிறுத்தி உடனடியாக கிரவலை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
தாண்டிக்குளம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளிலும் குறித்த செயற்பாட்டை இடைநிறுத்துமாறு எமது திணைக்களத்தால் நோட்டீஸ் முதல் கட்டமாக ஒட்டப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். ஏனைய இடங்களிலும் இவ்வாறு நடந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
