மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 07 துப்பாக்கிகளில் 05 துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது
5 months ago

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியுள்ளது என்று பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யா கோத்தா தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்,
"தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காகப் பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து 182 துப்பாக்கிகள் மட்டுமே மீளப்பெறப்படவுள்ளன.
யோஷித ராஜபக்ஷவிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகளைப் பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியுள்ளது.
அவரிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருக்கின்றன." என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
