
ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் குறித்து 464 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.
பல இலங்கையர்கள் இந்தியா அல்லது மத்தியகிழக்கு ஊடாக வழமைக்கு மாறான பாதைகள் மூலம் ரஸ்யா சென்றுள்ளதால் போரிடுவதற்காக எத்தனை இலங்கையர்கள் ரஸ்யா சென்றுள்ளனர் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து நேரடியாக சென்றவர்கள் குறித்த விபரங்களை பெறுவதும்கடினமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் 464 முறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவில் போரிட்ட வேளை உயிரிழந்தவர்களிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவில் போரிட்ட வேளை உயிரிழந்தவர்களிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஸ்யாவிற்கு செல்லும் இவர்கள் ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடுவது குறித்த ஆவணங்களில் கைச்சாத்திடுகின்றனர், என தெரிவித்துள்ளார்.
அவர்கள் இது குறித்து தாங்கள் அறியவில்லை என தெரிவித்தாலும் இந்த உடன்படிக்கைகள் சட்டபூர்வமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
126 இலங்கையர்களை தொடர்புகொள்வது மிகவும் கடினமானதாக காணப்படுவதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஆனால் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது இதன் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
