நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை அழைக்கிறது.




நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகள் தொடர்பில் கலந்துடையாடுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ். மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை வெள்ளிக்கிழமை (09) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
