யாழில் காற்றின் தரம் மிகையாகப் பாதிப்பு.-- மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டு
7 months ago

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளது.
சமீபத்திய மோசமான வானிலை காரணமாகவே, வடமாகாணத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளது” என்றார்.
இதேவேளை - யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒருமாத காலத்துக்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
