சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

1 year ago




சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் இன்னுயிரை தியாகம் செய்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது.

இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அந்த 1 சுயேச்சை குழுவின் முதன்மை வேட்பாளரான கே. வி. தவராசா, ஏனைய வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், புவனேஸ்வரன் வசந், விமலேஷ்வரி சிறிகாந்தரூபன், குணாளன் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.