
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்தது மாபெரும் தவறு என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் தெரிவித்தார் என்று கூறப்படுகின்றது.
அவர் எழுதிய, 'தி இந்தியாவே' என்ற நூலிலேயே இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார் என்று 'பாத் பைண்டர்' அறக்கட்டளையால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப் பட்ட 'இந்திய மாவத்தை' எனும் நூலில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த நூலில், 37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறாகும்.
தொடக்கம் முதலே இந்தியாவுக்கு இலங்கை சவாலாக இருந்தது.
நாட்டில் நிலவும் இனப்பிரச்சினை குறித்து அக்கறை கொண்டு, இந்தியாவால் உத்தரவாதமான தீர்வைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவை ஆரம்பத்திலேயே தவறாகி விட்டன. ஆனால், இது சாதாரணமான நடவடிக்கையல்ல.
இலங்கையில் அமைதிகாக்கும் பணிக்காக இந்தியா கடுமையாக உழைத்த போதிலும் அது குறைவான கவனத்தையே பெற்றது என்று வெளிவிவகாரத் துறையில் புகழ்பெற்ற அறிஞரான ஜெய்சங்கர் கூறினார் - என்றும் கூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
