மன்னார் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு
8 months ago

மன்னார் - நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், கால்நடை வளர்ப்பாளர்கள், மெசிடோ அமைப்பின் இணைப்பாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்த மனுவை கையளித்தனர்.
நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதி மேய்ச்சல் தரையில், சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இது தொடர்பில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
