43 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இளைஞர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
யாழ்.பொதுநூலக எரிப்பின் 43 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை பொதுநூலகத்தின் முன்பாகத் தனியாகக் கடைப்பிடிப்பதற்கு உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இணைந்து முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (01) காலை 9.30 மணியளவில் யாழ்.பொது நூலக எரிப்பு நினைவேந்தல் நிகழ்வைக் கடைப்பிடிப்பது எனத் தீர்மானித்து இது தொடர்பான தகவலை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தனர்.
இதுதொடர்பாகத் தகவலறிந்த இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று வழிநடத்திய இளைஞருடன்பல தடவைகள் கான்போனில் தொடர்பு கொண்டு நிகழ்வு தொடர்பாக வினவியுள்ளனர்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் தாம் நடத்தத் தீர்மானித்திருந்த யாழ்.பொதுநூலக எரிப்பு நினைவேந்தல் கடைப்பிடிப்பைக் கைவிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
