யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாள்களும் விமான சேவை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை.


யாழ்ப்பாணத்தில் இருந்து மது ரைக்கு வாரத்தின் ஏழு நாள்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை விமான சேவை அமைச் சகத்தால் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக இந்தியாவிலிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங் களுடன் இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - கொழும்பு இடையே சர்வ தேச விமான சேவை கடந்த செப்டம்பர் 2012 முதல் இடம்பெற்று வருகின்றது.
தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ ஏர்லைன்ஸ் (தினசரி) மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) வழங்கி வருகின்றன.
இந்நிலையில், செப்டம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த விமானம் 52 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வ தேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் விமான நிலையத் தில் சென்னையிலிருந்து வந்த பயணிகளுக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
