வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு 10 மாத காலப் பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம்
7 months ago

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப் பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒருவரும், 40 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 பேரும், 60 வயது தொடக்கம் 100 வயதுக்கு உட்பட்டவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.
வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
