நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
11 months ago















வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று முற்பகல் பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
18 ஆம் திகதி மஞ்சமும் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.
செப்டம்பர் 3 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
