இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷனுக்கு வாய்ப்பு.
10 months ago

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் கிதுஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது.
மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இணைக்கப்பட்டுள்ள போதும் இந்த பாடசாலையின் 7 ஆவது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் டக்ஸன் பியூஸ்லஸ் போன்ற தேசிய மட்ட வீரர்கள் குறித்த பாடசாலையில் இருந்து தேசிய அணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
