மழை வெள்ளம் காரணமாக வடக்கில் 64 ஆயிரம் ஹெக்ரேயர் நெல் வயல்களுக்கு பாதிப்பு

1 year ago



மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64 ஆயிரம் ஹெக்ரேயர் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23 ஆயிரம் ஹெக்ரேயர் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவான பகுதிகளில் நெல் விதைக்கப்பட்ட சில தினங்களில் இவ்வாறு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அநேக பகுதிகளில் குளக்கட்டுக்கள் உடைந்த காரணத்தினால் இவ்வாறு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கினாலும், அடுத்த போகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.