
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இன்று தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறும்.
இதில், எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில் வாய்மூலமான புதுப்பிப்பு கேட்கப்படவுள்ளது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகும் முடிவை கட்சியின் கொள்கைகளுக்கு அமைய எடுத்துள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை அமெரிக்கா பரிந்துரைத்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக நீதி கோரி போராடி வரும் தமிழினத்துக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
எனினும், பூகோளவாத போட்டியில் இலங்கையின் நிலைப்பாடே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கருதப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
