இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் தமிழர் பகுதிகளை சிங்கள - பௌத்த மயமாக்க உதவிகளை வழங்குகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடக்கும் சிங்கள - பௌத்த மயமாக்கலுக்கு இந்தியாவின் பா. ஜ.கவின் விரிவாக்கமாக உள்ள ஈழம் சிவசேனையின் முகவர்கள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படும் பௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் செயல்பாடுகளை செய்கின்றனர் என்றும் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மேலும், இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை. இந்தியா சிங்கள் பௌத்த விரிவாக்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும்.
சிங்கள் பௌத்த விரிவாக்கத்துக்கு சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையை தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயல்பாடுகள் மாத்திரமே நடக்கின்றன என்று சாடினார்.
அத்துடன், இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும்.
இதற்காக இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
