மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் நேற்று (04) கைது
7 months ago

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிசார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் பல குற்றச் செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்ற நியாயதிக்க எல்லையிலுள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின்னர் நீதிமன்றங்களுக்கு முன்னிலையாகாமல் இருந்தவர்களுக்கே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
