
இந்தியாவில் இன்று 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இண்டிகோ, விஸ்தாரா, எயார் இந்தியா மற்றும் ஆகாசா எயார் போன்ற சர்வதேச விமானங்களும் வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்ற விமான நிறுவனங்களில் அடங்குகின்றன.
இதில், இண்டிகோ, விஸ்தாரா மற்றும் எயார் இந்தியா, விமானங்களில் தலா 6 விமானங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெட்டா, இஸ்தானாபுல், பிராங்போட், சிங்கப்பூர், போன்ற இடங்களுக்கு பயணித்த விமானங்களே இந்த அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன.
இந்தநிலையில், நெறிமுறைகளுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக இந்த அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்தும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையிலும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்தே, நேற்று இலங்கைக்கு வந்த இந்திய விமானம் ஒன்றுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
