கனடாவில் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருக்கு பாலியல் குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

கனடாவின் வின்னிபெக் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கால்பந்தாட்ட அணி பயிற்றுவிப்பாளராக கடமை ஆற்றிய கெல்சி மெக்கே என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
54 வயதான மெக்கே தாம் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த குற்ற செயலுக்கு தண்டனையாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெக்கே பயிற்றுவிப்பாளராக இருந்த காலத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையிலேயே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயிற்றுவிப்பாளர், ஆசிரியர் ஆகிய பதவி நிலைகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மெக்கே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
