4 நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(26) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்
6 months ago

நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(26) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதன் போது கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஆரம்பித்தது.
இந்நிலையில் சிகிச்சைக்காக 24ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
