யாழில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக, போலி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த கனேடியப் பிரஜை ஒருவர் கைது

யாழில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக, போலியாகத் தயாரிக்கப்பட்ட தற்காலிக அனுமதிப்பத்திரம் வைத்திருந்த கனேடியப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவிலிருந்து கடந்த தடவை இலங்கைக்கு வந்திருந்தபோது, பிறிதொருவரின் உதவியுடன் அவர் சாரதி அனுமதிக்கான தற்காலிக அனுமதிப் பத்திரத்தைப் பணம் செலுத்திப் பெற்றுள்ளார்.
இம் முறை மீண்டும் கனடாவிலிருந்து வந்துள்ள நிலையில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக மோட்டார் திணைக்களத்துக்குச் சென்றபோதே அவர் ஏற்கனவே பெற்றிருந்த தற்காலிக அனும்திப்பத்திரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
