கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தினூடாக, அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, ஆயிரத்து 70 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கமைய இந்த உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
இதன்படி முதற்கட்டமாக மிஹிந்து சென்புர, சிறிசர உயன. மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக லக்ஸந்த செவன. ரந்திய உயன. லக்முத்து உயன. முவதொர் உயன. சியசத செவன, புரதொர செவன. ஜயமக செவன. மிஹிஜய செவன. ஹெலமுத்து செவன, சியபத செவன, லக்செத செவன, லக்கிரு செவன ஆகிய வீடமைப்புத் தொகுதியில் வசிப்போருக்கு முன் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த வருட இறுதியில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
