இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகர் உட்படப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் நேற்று தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
