யாழ்.நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறப்பு நிகழ்வு இன்று யாழ் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது




















யாழ்.நல்லூர் சைவத்தமிழ்ப் பண்பாட்டு கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் தைப்பூசதின திருநாளினை முன்னிட்டு அலங்காரா, நல்லூரா என்னும் கருப்பொருளிலான நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறப்பு நிகழ்வு இன்று நண்பகல் 12.00 மணியளவில் யாழ் நல்லூர் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் யாழ் நல்லூர் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நெற்பயிர்செய்கை நிலத்தில் நெல் அறுவடை இடம்பெற்று புதிர்எடுத்து நெற்பெட்டகத்தில் சேகரிக்கப்பட்டு அலங்காரா, நல்லூரா என்னும் கருப்பொருளிலான நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறக்கப்பட்டு அங்கு இருந்து மாட்டு வண்டியூடாக நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் கொண்டு சென்று கையளிக்கப்பட்டது.
பாரம்பரியமான முறையிலான மேள, தாள, வாத்தியங்கள்,புடைசூழ நண்பகல் 12.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன்,யாழ் மாநகர ஆணையாளர் ப.கிருஷ்னேந்திரன்,யாழ்,நல்லூர் பிரதேச செயலாளர்கள்,தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன்,வேலன் சுவாமிகள், நல்லூர் சைவத்தமிழ்ப் பண்பாட்டு கலைக்கூடத்தின் உறுப்பினர்கள்,யாழ் நல்லூர் கைலாசப்பிள்ளையார் தேவஸ்தான உறுப்பினர்கள்,சமய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
