தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 4ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 4ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது.
பல்கலைக்கழக பதில் துணைவேந்தரும் மாநாட்டின் தலைவருமான கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத் தலைமையில் தொழில் நுட்பவியல் பீட பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த ஆய்வு மாநாட்டை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் ஏற்பாடு செய்திருந்தது.
"நிலையான எதிர்காலத்துக்கான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான எல்லைகளை ஆராய்தல்" எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு விசேட பேச்சாளர்களாக பிரித்தானியாவைச் சேர்ந்த பேராசிரியர் டிலாந்தி அமரதுங்க மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் சாக் லாம் சில்பசுவாஞ்சை ஆகியோர் நிகழ்நிலையூடாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த ஆய்வு மாநாட்டுக்கு 81 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 52 கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி ஏ.எம்.எம்.முஸ் தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீட பீடாதிபதி அஷ்ஷெய்க் எம். எச். ஏ. முனாஸ், நூலகர் எம். எம். றிபாவுடீன், பேராசிரியர் எம். எச். தெளபீக், லைக்கா ஞானம் பௌண்டேசன் அம்பாறை இணைப்பாளர் அகிலன், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
