

யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பை மீறித் திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிக்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி, இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 32 பொது அமைப்புக்களால் பருத்தித்துறை நீதிமன்றில் கடந்த வருடம் மே மாதம் 5ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் இன்று புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
இன்று குறுக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்துக்காக வழக்கு எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
