இலங்கை தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை.

1 year ago


இலங்கை தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க அக்னி தீர்த்தக் கடலில் இந்தியத் தரப்பால் மணல் ஆய்வு இடம்பெறுகின்றது.

இலங்கை தலைமன்னார். இந்திய தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து 1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நடைபெற்று வந்தது. 1964இல் அடித்த கோரப் புயலின் காரணமாக இந்தியாவின் தனுஷ்கோடி நிலை குலைந்ததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறு இயற்கைத் தாண்டவத்- தால் அழிவடைந்த துறைமுகம் ஊடான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட போதும் இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்தக் கப்பல் பயணத்தை மீண்டும் தொடங்கி தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதனையடுத்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கக்கூடிய சூழல் அப்பகுதி யில் காணப்படுகின்றது. அதற்கேற்ற வகையில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளிலும் கப்பல் செல்லும் வழித் தடத்திலும் மண்வளம் சீராக உள்ளதா என்ற ஆய்வுகள் தற்போது இந்தியத் திசையில் இடம்பெறுகின்றது.

அண்மைய பதிவுகள்