கிளிநொச்சி - பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் ஏ- 35 வீதியில், புளியம்பொக்கணை பாலத்துக்கு கீழிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு,






கிளிநொச்சி - பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் ஏ- 35 வீதியில், புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்துக்கு கீழிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரண்டு சடலங்களையும் சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மாத் ஜெமில் பார்வையிட்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை செல்லும் நோக்குடன், ஏ-35 வீதியால் பயணித்த இளைஞர்கள், புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள், ஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலாவளியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்ரன் சாந்தன் மற்றும் 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு காணப்படும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு இது போன்ற உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
