

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் 10 இல் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார - உணவுத் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு மாற்று வழிமுறைகளை கையாளும் நிலை தொடர்வதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக உணவுத்திட்டத்தின் வழிகாட்டலின் கீழ் ஐ.நா. சபையின் இலங்கையிலுள்ள முகவர் அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் இலங்கை அர சாங்கத்துடன் ஒருங்கிணைந்து நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கண்டறி யவும் மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்புகளுக்கு அவ சியமான தகவல்களை வழங்குவ தற்குமான மதிப்பாய்வு ஒன்றை கடந்த 11-14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுத்தன.
இதேவேளை, தேசிய பாட சாலைகளுக்கான உணவு வழங்கல் செயல்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் உலக உணவுத் திட்டத்தால் கடந்த ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில் 7,012 பாடசாலைகளுக்கு 421 மெற்றிக் தொன் எண்ணெய், 271 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த மாதம் மொத்தமாக 592 மெற்றிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன், ஜூலை - டிசெம்பர் வரையான எதிர்வரும் 6 மாத காலத்துக்கு நலிவுற்ற சமூகப் பிரிவினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியின் பெறுமதி 84 ஆயிரத்து 425 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக உணவுத்திட்டம், கடந்தகால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும் பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பல் வேறுபட்ட மாற்று வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. என்றும் கூறியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
