
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று (12) காலை கைது செய்யப்பட்டார்.
விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே இவ்வாறு யாழ். மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது அந்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
