வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகாத டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து முன்னிலைப்படுத்த உத்தரவு

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு போலியான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி, தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
