எம்.பி சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் சு.முரளிதரனுக்கும் இடையிலான சந்திப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது



பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக, வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள உள்ளக வீதிகளைச் சீரமைத்தல் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த சந்திப்பில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
