சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.
10 months ago

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாசாவின் தலைமை நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்தவை வருமாறு, "விண்வெளிப் பயணம் மிகவும் ஆபத்தானது. அது பாதுகாப்பான விண்கலனாக இருந்தாலும் ஆபத்து என்பது உள்ளது. அதுவும் சோதனை அடிப்படையிலான பயணம் பாதுகாப்பானது அல்ல. அதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில் மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம்.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி பூமிக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளோம். அதுதான் பாதுகாப்பான வழியாக இருக்கும். இந்த பணியில் ஈடுபட்டுள்ள நாசா மற்றும் போயிங் நிறுவனத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
