
கனடாவில் கடந்த ஒரு தசாப்த காலமாக காற்றுச் சீராக்கிகளின் (குளிரூட்டிகளின்) பயன்பாடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிவரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது சுமார் 68 வீதமான அளவில் காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பெரும் எண் ணிக்கையிலானவர்கள் காற்று சீராக்கிகளை கொள்வனவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரவில் உறக்கம் கொள்ள முடியாத காரணத்தினால் பலரும் இவ்வாறு காற்று சீராக்கிகளை வீடுகளில் பொருத்திக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அல்பர்ட்டா போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவ்வாறு காற்று சீராக்கிகள் தற்பொழுது பயன்படுத் தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய புள்ளி விவரத் தகவல் களின் அடிப்படையில் கல்கரியில் சுமார் 32 வீதமான வீடுகளில் காற்று சீராக்கிகள் காணப்படுகின்றன. இது கடந்த பத்து ஆண்டுகளில் 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரி விக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறு காற்றுச் சீராக்கிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காட்டுத்தீ போன்ற காரணிகளினால் இவ்வாறு காற்று சீராக்கியின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
