யாழ்.வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் நினைவுநாளும்





யாழ்.வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் நினைவுநாளும் நேற்று செவ்வாய்க்கிழமையின் கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியில் அமைந்துள்ள சரஸ்வதி சிலைக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், தொடர்ச்சியாக தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், ஆசியுரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை, மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன நடைபெற்றன.
கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, சிறப்பு விருந்தினராக திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நே. விஷ்ணுதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறுவுநர் நினைவு பேருரையை கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் நா. அம்பிகைபாகன ஆற்றினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
